81. உலா வருவோம்
401. அதிகம் துள்ளும்
மீன்கள் தான்
அதிகமாக வலையில்
சிக்குகின்றன.
402. எல்லாம் தெரியும்
என்கிறான்
ஏதும் தெரியாதவன்.
403. எழுத்தில் பிழையிருப்பினும்
ஏற்றுக் கொள்கிறது
இணையதளமென்னும்
சங்கபலகை.
404. இரைச்சல் தாங்கவில்லை
மௌனமே
மௌனம் ஏன் இன்னும்.?
405, ஓய்வூதியம் தொடர்ந்திட
உயிர் வாழ் சான்றிதழ்
கொடுத்து திரும்பினேன்
விண்ணிலிருந்து
இறைவன் பார்த்திருக்ககூடும்.
.
Comments
Post a Comment