82. உலா வருவோம்
406. பிடிவாதங்கள் தளர்ந்து
காலத்தின் போக்கில்
கரைந்து கொண்டிருக்கிறேன்
எதிர்பார்ப்புகள்
ஏதுமின்றி.
407,கடற்கரை மணலில்
பாதச்சுவ்டுகள்
குவிந்து கிடைக்கின்றன
மாறும் தன்மையிலும்
மாறாதவைகளாக,
408. அநீதியைக் கண்டு
மனம் கொந்தளித்தாலும்
மௌனமாய் இருந்திடு
என் கிறது வயது.
409.இறுதிச் சடங்கில்
முதன் முதல் பார்த்த
அழகிய முகம்
நினைவில் வந்து தொலைக்கிறது,
410.வயது ஆக ஆக
விலகுகின்றனர் நண்பர்கள்
வயது
அவர்களுக்கும் ஆகிறது அல்லவா?
Comments
Post a Comment