83, உலா வருவோம்

 411. எதிரே வந்தவர்

          புன்னகைத்தார்

          நானும்

          புன்னகைத்தேன் 

          புன்னகைதானே

          அன்பிற்கான தொடக்கம்.


412. மனதை அமைதிப்படுத்து 

         மனக்காயங்கள் ஆறிட 

          மருந்து அது ஒன்றே.


413.சிரிக்கும் காந்தியைக் கொடுத்து

       சில்லறைகளுடன் 

       சிந்தை மயங்கி 

       சிரித்துக் கிடக்கிறான்

      குடிமகன்.

414. முதியோர் இல்லத்தில் 

         மரணித்த தாய்க்கு 

        வீட்டில் திதி கொடுத்தான் 

       மகன்,


415. நாட்டில் 

        நல்லவன் யார்

        கெட்டவன் யார்

        தீர்மானிக்கிறது

        சூழ்நிலை.

Comments

Popular posts from this blog

69.உலா வருவோம்

68. உலா வருவோம்

70, உலா வருவோம்