86. உலா வருவோம்

 426. எதிர்பார்ப்புகள் 

         ஏமாற்றம் தரும் 

         என அறிந்தும் 

         எதிர்பார்த்து 

         ஏமாறுவதே 

         என் வழக்கமாய் போனது.


427. கரையொர்ம் அமர்ந்து 

        கதலியின் கண்களை 

        கயல்விழி என்றிட்டான் 

        மீன் காதலன் 

        தன் காதலியை 

        சந்தேகப்பட்டான்.


428. வானம் வெளுத்தபின்னும் 

         விண்ணில் மறையா 

         வானவில்லாய் 

         வாழ்வின் நினைவலைகள்,

429. பழுத்து 

         விழும் நிலையில் உள்ள 

         இலையை 

         கொஞ்சிக் கொண்டிருக்கிறது 

         வருத்தத்துடன் மரம்.

430.அறிவாளியாக 

       அறியப்பட்டவன் 

       அதிகம் பேச 

        அறிவிலி என 

         அறிய வந்தது.

Comments

Popular posts from this blog

69.உலா வருவோம்

68. உலா வருவோம்

70, உலா வருவோம்