87. உலா வருவோம்

 431, விண்ணில் 

          பூசணிக்கீற்றாய் 

           மூன்றாம் பிறை

           கிழித்துப்போட்ட 

          காகித குவியலாக 

         நட்சத்திரங்கள்.


432, பென்சிலை 

         சீவிக் கொண்டிருக்கிறேன் 

          சீவல் போல 

          மரத்துகள்கள்

          கீழ் விரித்திருந்த 

          வெள்ளைத்தாளில்.

          தாள் சொன்னது  அவற்றிடம் 

          நான் உங்கள் சகோதரனே என்று. 

433. வானில் மழை மேகம்

         கதிரவனைக் காணோம்

         அவனை மட்டுமா...என் 

         நிழலினையும் காணோம்..


434.மனம் புரவியாய் ஓட

        கைகள் நத்தையாய் ஊர

        தட்டச்சு திகைத்து செயல்பட

        செய்வதறியாது கணினி 

        விழிக்கிறது.

435,தந்தையின் 

       நினைவுகளுக்கு 

       மரணமில்லை 

         அவர் சொல்லிச் சென்றவை 

         மறப்பதில்லை,

          

Comments

Popular posts from this blog

69.உலா வருவோம்

68. உலா வருவோம்

70, உலா வருவோம்