84. உலா வருவோம்

 416, வெள்ளைத்தாளில்

          வரைந்திட்டேன் 

          பறவை ஒன்றினை 

          பறக்காமல் அமர்ந்திருக்கிறது 

          சிறகு வரைய மறந்ததால்.


417, பழுத்த இலை விழுந்து 

         துளிரும் இலைக்கு 

        வழி விட்டது,


418, சரியானதை 

         சரியான நேரத்தில் 

        சரியாகச்செய்தால்

       சரியாக 

       பறித்திடலாம் 

      வெற்றிக்கனியை.


419. உன்னிடம் 

        இருப்பது 

       இறைவன் கொடுத்தது 

       இல்லாதது 

       இறைவன் கொடுக்கப்போவது.


420. மலையின் உச்சியில்  நின்றால்

        மலையும் உன்னை விட 

        உயரம் குறைவு தான்.


       

Comments

Popular posts from this blog

69.உலா வருவோம்

68. உலா வருவோம்

70, உலா வருவோம்