13. உலா வருவோம்

 61.நியாயம்வேண்டி

      போராடி  போராடி

     அநியாயத்துக்கு

     இளைத்து  விட்டான்


62.எந்த சாதியில் பிறக்கவேண்டும்

      எனும் விருப்பம்

      உன்னிடம் இல்லாதபோது

      அதை வைத்து

     ஆர்ப்பாட்டங்கள் ஏன்?


63. இதனை

      இதனால் 

      இன்று முடித்திடுவேன் என

      செயலில் ஈடுபடுங்கள்

      அனுதினமும் 

      புதிதாய் பிறந்திடிடுவீர்..


64.தேனீ தேனிசைப்பாடி

      தேனினை அருந்தி

       மலர்களை விட்டு

       மறைகின்றன.


65. புகழ்ச்சி கண்டு 

       மயங்காதே

       பின்னால் 

       வந்துகொண்டிருக்கிறது 

      இகழ்ச்சி,

     

Comments

Popular posts from this blog

1-உலா வருவோம்

14.உலா வருவோம்

2. உலா வருவோம்