Posts

Showing posts from September, 2026

40,உலா வருவோம்

 196.உழைப்பின் வலி          இருந்தால்          வெற்றிக் கனியினை          பறித்திடலாம். 197.காற்று இல்லை         மூச்சு முட்டுகிறது         ஜன்னலை திறக்கையில்         அதன் அளவே          உள்ளே வருகிறது, 198.இருட்டில் தான்         நடக்கிறேன்        வெளிச்சத்தை அடையும்         நம்பிக்கையுடன். 199. விடியலில்         ஓணான் ஒன்று          மரக்கிளையில்          தண்டால் எடுத்து           கொண்டிருந்தது. 200. என்னைத் தவறாக          புரிந்து கொண்டோர் சிலர்...          சரியாக புரிந்து  கொள்ளாதோர் பலர், 

39.உலா வருவோம்

 191. உன்          உணர்வுகளுக்கு          மதிப்பில்லையெனில்             விலகிவிடு        அவ்விடத்திலிருந்து. 192.. தவறாக          எழுதுவது          என்னவோ பேனா தான்         ஆயின்         கிழித்து எறியப்படுவது         காகிதமாய் இருக்கிறது        பழி ஓரிடம் பாவம் ஓரிடம்         என்பதுஇதுதானோ? 193. எண்ணங்களை           செயலாக்க           உழையுங்கள்         கனவு மெய்ப்படும். 194. களங்கம் இருந்தாலும்         நிலவு அழகு தான்         மனிதர்களில் சிலரைப்போல. 195. உங்களையே கேள்விகள்          கேளுங்கள்         சிந்தித்துக்கொண்டே இருங்கள்     ...

38. உலா வருவோம்

 186. எதிரே அமர்ந்திருக்கிறாள்           யார் நீ  ?என்றேன்.          நானே நீ....நீயே நான்..என்றாள்          இடக்கையில்           எழுதுகோலுடன், 187. பணத்தை           இழந்தால்          மீட்டெடுக்கலாம்          கடந்து போன...         காலத்தை இழந்தால்..? 188,தற்பெருமை         தற்கொலைக்குசமமாம்       தினமும் எவ்வளவு        தற்கொலைகள் இங்கு.  189. முன்னேறவிடாமல்           ஆயிரம் கதவுகள்            மூடியிருக்கலாம்             முயற்சி செய்            ஒரு கதவாவது திறக்கும். 190. நின்று கொண்டே இருக்காதீர்கள்         நகர்ந்து கொண்டே இருங்கள்         இலக்கு நோக்கி.

18. உலா வருவோம் (old one)

86.  86. நல்லது செய்ய        நினைத்தாலும்       நாநிலத்தில்       கல்லெறியப்படுகிறது. 87.வைகறையில்      மயிலிறகால்     வருடினாற் போல    மனம். 88.அம்மா....      முற்பிறவியில் நான்     நல்ல காரியங்கள் செய்திருப்பேன்    அதனால் தான்   இப்பிறவியில்  அனுப்பப்பட்டிருக்கிறேன்  உன் மூலம் இங்கு. 89.காய்ந்த சரகு     காற்றில் பறப்பதை    மரம்   வேதனையுடன்    பார்க்கிறது. 90.கட்டுப்பாடு     கருவிகள்  ஏதுமின்றி    வலசைகள்   வானில் செல்கின்றன   சரியான பாதையில்