78.உலா வருவோம்
386. சூல்கொண்ட மேகம்
பிரசவிக்க துடிக்கின்றது
வாயு பகவானோ
காற்றினை சில்லென வீசாது
வேடிக்கை பார்க்கின்றான்,
387, சொல்லாத சொல்லிற்கு
நீ முதலாளி
உமிழ்ந்துவிட்ட சொற்களுக்கு
அது முதலாளி.
388, கூட்டைப் பிளந்து
பறக்க துடிக்கும்
பட்டாம் பூச்சியாய்
கூட்டுப்புழுவான நான்.
389. இரண்டு நாட்களாக
மக்களை
வறுத்து எடுத்துவிட்டாய் என
வருண பகவான்
கதிரவனை
அடக்கி வைத்துள்ளானோ
இன்று.
390. பணி விலகல்
பணி விலக்கல்
அந்த 'க்" ஒன்று
அர்த்தத்தையே மாற்றுகிறது
அன்னைத் தமிழில்.
Comments
Post a Comment