80, உலா வருவோம்

 396. இழுப்பதா

         தள்ளுவதா.....

         தள்ளுவதா 

         இழுப்பதா

        இந்த சந்தேகம் 

        இருந்துகொண்டுதான் 

        இருக்கின்றது 

        எல்லோருக்கும் 

        எப்போதும்.


397. ஒன்றை பெற்றும்

         ஒன்றை இழந்தும்

         நகர்ந்துகொண்டிருக்கின்றன

         நாட்கள், 

398.ஆரம்ப சிக்கலை 

        அறிந்துகொண்டு விட்டால் 

       அடுத்தடுத்ததை

       சமாளித்து விடலாம்.

399. படித்த புத்திசாலிகளுடன் 

        வாழ்வதை விட 

        படிக்காத முட்டாள்களுடன் 

        வாழ்வதே நன்று.


400. சித்திரை நிலவு 

         இத்தரையில் விழ 

         நித்திரை இழந்து தவிக்குது

        பத்தரை மாற்று

        கன்னி மனம் ஒன்று 

        காதலனை எண்ணி.

    

Comments

Popular posts from this blog

69.உலா வருவோம்

68. உலா வருவோம்

70, உலா வருவோம்