34.உலா வருவோம்
166.அறுவடைக்கு தயாரான
நெற்கதிர்கள்
ஒன்றுக்கொன்று
முத்தமிட்டுக்கொண்டிருக்கின்றன
வயக்காட்டில்
விரைவில்
பிரியப்போவதை எண்ணி,
167., எண்ணமெல்லாம்
ஏட்டில் வடித்திட
அன்னைத்தமிழ் இருக்கையிலே
என்ன கவலை எங்க்கு,
168. இருக்கும் வரை
இகழ்ந்து விட்டு
மறைந்ததும்
நாட்டுக்கே பேரிழைப்பு
என்கிறார்களே ஏன்?
169,,முட்டையை
வெளியில் இருந்து உடைத்தால்
அது மரணம்
உள்ளிருந்தே உடைக்கப்பட்டால்
அது ஜனனம்.
170.நல்லது செய்யப்போய்
நன்றாக
வாங்கிக் கட்டிக் கொள்வதே
வாடிக்கையாய் ஆனது எனக்கு,
Comments
Post a Comment