35. உலா வருவோம்

  171.. செடி,கொடி மரம் மட்டுமா

          பூக்கின்றன 

          நாமும் தான்

          தினமும் 

          புன்னகை பூத்திடுவோம் 

          அனைவரிடமும்.


 172, காவிரித்தாயே 

       பெருக்கெடுத்து 

       புகுந்த வீடு வந்திடு 

       உன்னை வரவேற்று

      தங்க தாம்பாளத்தில் 

      தாங்கிடுவோம் நாங்கள்.


 173, அன்பு மனக்குளத்தின் 

        ஆழம் அறியாது 

        கற்களை வீசுகின்றனர்

       சுற்றமும் நட்பும்.

 174. எவரெஸ்ட் சிகரம் 

         எட்டிவிட்டேன்

         என்றது 

         நேராக வைத்த 

        கரங்களின் முட்டியிலிருந்து

        நடுவிரல் நுனி வரை 

       ஏறிட்ட சிற்றெறும்பு.


 175..மௌனமாய் இருப்போரின் 

       மௌனத்தைப் 

       புரிந்து கொள்வது  கடினம்.

Comments

Popular posts from this blog

16.உலா வருவோம்

15..உலா வருவோம்

28. உலா வ்ருவோம்