38. உலா வருவோம்
186. எதிரே அமர்ந்திருக்கிறாள்
யார் நீ ?என்றேன்.
நானே நீ....நீயே நான்..என்றாள்
இடக்கையில்
எழுதுகோலுடன்,
187. பணத்தை
இழந்தால்
மீட்டெடுக்கலாம்
கடந்து போன...
காலத்தை இழந்தால்..?
188,தற்பெருமை
தற்கொலைக்குசமமாம்
தினமும் எவ்வளவு
தற்கொலைகள் இங்கு.
189. முன்னேறவிடாமல்
ஆயிரம் கதவுகள்
மூடியிருக்கலாம்
முயற்சி செய்
ஒரு கதவாவது திறக்கும்.
190. நின்று கொண்டே இருக்காதீர்கள்
நகர்ந்து கொண்டே இருங்கள்
இலக்கு நோக்கி.
Comments
Post a Comment