18. உலா வருவோம் (old one)
86. 86. நல்லது செய்ய
நினைத்தாலும்
நாநிலத்தில்
கல்லெறியப்படுகிறது.
87.வைகறையில்
மயிலிறகால்
வருடினாற் போல
மனம்.
88.அம்மா....
முற்பிறவியில் நான்
நல்ல காரியங்கள் செய்திருப்பேன்
அதனால் தான்
இப்பிறவியில்
அனுப்பப்பட்டிருக்கிறேன்
உன் மூலம் இங்கு.
89.காய்ந்த சரகு
காற்றில் பறப்பதை
மரம்
வேதனையுடன்
பார்க்கிறது.
90.கட்டுப்பாடு
கருவிகள் ஏதுமின்றி
வலசைகள்
வானில் செல்கின்றன
சரியான பாதையில்
Comments
Post a Comment