40,உலா வருவோம்
196.உழைப்பின் வலி
இருந்தால்
வெற்றிக் கனியினை
பறித்திடலாம்.
197.காற்று இல்லை
மூச்சு முட்டுகிறது
ஜன்னலை திறக்கையில்
அதன் அளவே
உள்ளே வருகிறது,
198.இருட்டில் தான்
நடக்கிறேன்
வெளிச்சத்தை அடையும்
நம்பிக்கையுடன்.
199. விடியலில்
ஓணான் ஒன்று
மரக்கிளையில்
தண்டால் எடுத்து
கொண்டிருந்தது.
200. என்னைத் தவறாக
புரிந்து கொண்டோர் சிலர்...
சரியாக புரிந்து
கொள்ளாதோர் பலர்,
Comments
Post a Comment