41. உலா வருவோம்

 201. மனப்புண்ணை 

          நினைவுகள் எனும் 

          காக்கைகள் 

          கொத்திக் கொத்தி 

          குருதியை 

           கொட்டவைக்கின்றன.

202.  அவர் நாண

         நன்னயஞ் செய்து விட்டாலும் 

         நட்பு 

         கண்ணாடியில் 

         விழுந்தது விரிசலே,


203.  வெற்றிக்கான 

         வழியினை 

         தோல்வியினைக் கேட்டு 

         அறிந்தேன்.


204, நீ

        செய்த பாவங்களை 

        குவியலாய் மூட்டை கட்டி 

        உன்னை பின் தொடர்ந்து 

        இறுதியில் உன்னிடம் தருவான்

        அதுவே கர்மா எனப்படும்.


205. யாராக இருந்தாலும் 

         வாழ்த்திடு அவர்களை.

         உனது அந்த செயல்

         உயர்த்திடும் உன்னை.

Comments

Popular posts from this blog

16.உலா வருவோம்

15..உலா வருவோம்

28. உலா வ்ருவோம்