42.உலா வருவோம்

 206. அளவோடு

          ஆசைப்படு 

           வாழும் நாட்கள் 

           வசதியாகவே இருக்கும்.

207. மழை பிரமிப்பு தான்

         முதல் மழை என்று பார்த்தேன் 

         நினைவில் இல்லை 

         பார்க்கும் மழை எல்லாம் 

         முதல் மழை தான்

        எப்பணியாயினும் 

        மழை வந்திடின்

        அதைப்பார்த்தலே

         முதல் பணிஎனக்கு.

208. மழையில் நனையவே

         ஆசைப்படுகிறேன் 

         விண்ணின் கொடைக்கு 

         குடை எதற்கு,

209.தொடர்ந்து வெல்பவனின் 

        சிறு தோல்வியையும் 

       சமுதாயக்கண்ணாடி 

      சகிப்பதில்லை.

210. முன்னேற 

        ஆசைபட்டாலும் 

        தொழில் நுட்ப அறிவு 

        பின்னுக்கு  தள்ளுகிறது.

Comments

Popular posts from this blog

16.உலா வருவோம்

15..உலா வருவோம்

28. உலா வ்ருவோம்